/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்கல் சாலையில் வேரோடு சாய்ந்த மரம்
/
நெடுங்கல் சாலையில் வேரோடு சாய்ந்த மரம்
ADDED : டிச 02, 2024 02:11 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, நெடுங்கல் ஊராட்சி உள்ளது. நெடுங்கல்லில் இருந்து மின்னல் சித்தாமூர் வழியாக அச்சிறுபாக்கம் செல்லும் சாலை உள்ளது.
இதில், நெடுங்கல் ஊராட்சி நியாய விலை கடை அருகே இருந்த பழமையான பெரிய மரம், புயல் காற்றின் வேகத்தால், வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மீட்பு குழுவினர், அப்பகுதிக்கு விரைந்து சென்று, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அதே போல், மதுராந்தகம் தனியார் பள்ளி அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்து, மின் கம்பியின் மீது விழுந்தது. மதுராந்தகம் தீயணைப்பு துறையினர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.