/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க வலியுறுத்தல்
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க வலியுறுத்தல்
மலையடி வேண்பாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 02:05 AM

செங்கல்பட்டு:மலையடி வேண்பாக்கம் ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றியம் கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.
இந்த ஏரியில் இருந்து 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, விவசாய நிலங்கள் வீடுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், ஏரியின் தண்ணீரை பாசன பயன்பாட்டிற்கு விவசாயிகள் பயன்படுத்தவில்லை.
ஆனாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு, ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டரிடம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பின், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துார் வாரிரும் பணியை துவக்கினர்.
ஆனால், முறையாக துார் வாரி சீரமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையில், ஏரியின் அருகில் குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம், கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு, ஏரியை துார் வாரி சீரமைக்கவும், ஏரிக்கரையை பலப்படுத்தி, நடைபயிற்சி செல்லும் வகையில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

