/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூங்குணம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
/
பூங்குணம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
பூங்குணம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
பூங்குணம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2025 12:55 AM

சித்தாமூர்:பூங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே பூங்குணம் கிராமத்தில் மதுராந்தகம்-சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. தினசரி ஏராளமான மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கிராமம் உள்ளது.
தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணியர் என ஏராளமான மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்கின்றனர், கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக மின்விளக்கு வசதி இல்லை,
இதனால் இரவு நேரத்தில் சாலையில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பூங்குணம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.