/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தரமற்ற குடியிருப்பு கட்டுமான பணி வடபட்டினம் இருளர் குற்றச்சாட்டு
/
தரமற்ற குடியிருப்பு கட்டுமான பணி வடபட்டினம் இருளர் குற்றச்சாட்டு
தரமற்ற குடியிருப்பு கட்டுமான பணி வடபட்டினம் இருளர் குற்றச்சாட்டு
தரமற்ற குடியிருப்பு கட்டுமான பணி வடபட்டினம் இருளர் குற்றச்சாட்டு
ADDED : மார் 20, 2024 12:17 AM

கூவத்துார்:கூவத்துார் அருகே வடபட்டினம் ஊராட்சியில், 30க்கும் மேற்பட்ட இருளர்இன மக்கள் வீட்டுமனைப் பட்டா மற்றும் சொந்த வீடு இல்லாமல், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.
இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு, தலா 4.37 லட்சம் ரூபாய் என, மொத்தம் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தொகுப்பு வீடு கட்ட, வடபட்டினம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.
ஒரு அடி ஆழம் மட்டும் அடிவாரம் அமைத்து, வீடு கட்டும் பணி நடந்து வந்தது.
நீரோட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், எதிர்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வீடுகள் இடியும் நிலை ஏற்படும் என்பதால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, சில வாரங்களுக்கு முன் கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு நடந்து வரும் நிலையில், வீடுகள் தற்போது தளம் அமைக்கும் நிலையில் உள்ளது. சுவர்கள் கை வைத்தாலே ஆடும் நிலையில் உள்ளன.
இதே நிலையில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்தால், மேல் தளம் இடிந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இருளர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

