/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காதலர் தினம் வெளிநாட்டிற்கு பறக்கும் ரோஜாக்கள்
/
காதலர் தினம் வெளிநாட்டிற்கு பறக்கும் ரோஜாக்கள்
ADDED : பிப் 12, 2024 12:31 AM
சென்னை : தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் விளைகிறது.
இவை, சிங்கப்பூர், மலேசியா, வங்காள தேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும், பல்வே அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
காதலர் தின கொண்டாட்டம் நெருங்குவதால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு, மலர்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
தாஜ்மஹால், கார்வெட், அவலாஞ்சி, கோல்ட் ஸ்டிரைக் உள்ளிட்ட ரோஜாக்களுக்கு கிராக்கி அதிகரித்து நல்ல விலை கிடைத்து வருகிறது.
தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பாண்டு, ஒரு கோடி ரோஜா பூக்கள் வரை ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டைவிட, நல்ல விலை கிடைத்து வருகிறது.
இப்போது, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ரோஜா பூக்கள், 13 மற்றும் 14ம்தேதிகளில் 50 ரூபாய் வரை விலை போக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.