/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் இடத்தில் வன்னியர் விழா 1.36 லட்சம் ரூபாய் வருவாய்
/
கோவில் இடத்தில் வன்னியர் விழா 1.36 லட்சம் ரூபாய் வருவாய்
கோவில் இடத்தில் வன்னியர் விழா 1.36 லட்சம் ரூபாய் வருவாய்
கோவில் இடத்தில் வன்னியர் விழா 1.36 லட்சம் ரூபாய் வருவாய்
ADDED : மே 12, 2025 11:45 PM
மாமல்லபுரம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் இடத்தை, வன்னியர் சங்க விழாவிற்கு பயன்படுத்தியதற்கு வாடகையாக, 1.36 லட்சம் ரூபாய், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள, நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்குச் சொந்தமாக, அப்பகுதியில் நிலம் உள்ளது.
இந்த கோவில் இடத்தில் 2018ல், இந்திய ராணுவ கண்காட்சி நடத்தப்பட்டது.
அதே இடத்தில் தற்போது, சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது.
வன்னியர் சங்கம் சார்பில் இவ்விழா ஏற்கனவே, மாமல்லபுரத்தில் தான் தொடர்ந்து நடத்தப்பட்டது. 2013ல் விழா நடந்த போது, இங்குள்ள உலக பாரம்பரிய சின்னமான கடற்கரை கோவிலில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றியதால் சர்ச்சை ஏற்பட்டது.
மரக்காணத்தில் ஜாதி கலவரமும் ஏற்பட்டது.
இதன் காரணமாக, 12 ஆண்டுகளாக விழா நடத்துவது தவிர்க்கப்பட்டது.
தற்போது, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கோவிலுக்குச் சொந்தமான இடத்தை தேர்வு செய்து, நேற்று முன்தினம் அங்கு விழா நடத்தப்பட்டது.
50 ஏக்கர் பரப்புள்ள இந்த கோவில் இடத்தை, மாநாடு விழாவிற்கு பயன்படுத்தியதற்காக, பா.ம.க., கவுரவ தலைவர் மணி பெயரில், 1.36 லட்சம் ரூபாய் வாடகை கட்டணம், முன்னதாக கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தப்பட்டதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.