/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராமங்களில் பணிக்கு வராத வி.ஏ.ஓ.,க்கள்
/
கிராமங்களில் பணிக்கு வராத வி.ஏ.ஓ.,க்கள்
ADDED : பிப் 01, 2024 10:34 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதிகளில், கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பணியிடத்திற்கு வராமல், திருக்கழுக்குன்றத்தில் முகாமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வருவாய்த்துறை வழங்கும் ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள், பிற சேவைகள் ஆகியவற்றுக்காக, பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலரை நாடுகின்றனர்.
எனவே, கிராம நிர்வாக அலுவலர், அவரவர் பணியிட பகுதியில் தங்கவும், அலுவலக பணியாற்றவும், அரசு அறிவுறுத்தியுள்ளது.
திருக்கழுக்குன்றம் சுற்றுப்புறத்தில் உள்ள பல கிராமங்களின் அலுவலர்கள், கிராமங்களுக்கு செல்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் வாடகை அலுவலகம் ஏற்பாடு செய்து, அங்கேயே பணியாற்றுவதால், அவர்களை தேடிச்சென்று அவதிப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

