/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேகம்
/
அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED : நவ 24, 2024 02:42 AM
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அடுத்த மதுரா புதுப்பேட்டை கிராமத்தில், தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. கடந்தாண்டு தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காலை மங்கள இசை, கோபூஜை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்,108 கலச அபிஷேகம்நடந்தது.
இவ்விழாவில், திரளான அய்யப்ப பக்தர்கள், பகுதிவாசிகள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு, 'கலியுக வரதன் அய்யப்பன்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற் பொழிவு நடந்தது.