/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் புதிய டாஸ்மாக் அகற்றக்கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்
/
மறைமலை நகரில் புதிய டாஸ்மாக் அகற்றக்கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்
மறைமலை நகரில் புதிய டாஸ்மாக் அகற்றக்கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்
மறைமலை நகரில் புதிய டாஸ்மாக் அகற்றக்கோரி வி.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2024 12:14 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 13வது வார்டு பாவேந்தர் சாலையில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், சர்ச், கோவில், தனியார் பள்ளி ஆகியவை உள்ளன.
இந்நிலையில், பள்ளிக்கு அருகில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு, பொது மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று காலை, வி.சி., கட்சியின் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், அடிகளார் சாலையில் இருந்து, திருவள்ளுவர் சாலை வழியாக, பொதுமக்களுக்கு மதுவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பேரணி சென்றனர்.
பேரணியாக சென்றவர்களை, திருவள்ளுவர் - பாவேந்தர் சாலை சந்திப்பில், இரும்பு தடுப்புகள் அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, சாலையோரம் நின்று, டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, நான்கு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், புதிய டாஸ்மாக் கடையை சுற்றிலும், பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.