/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் கோவில் பல வகை உரிமங்கள் ஏலம்
/
வேதகிரீஸ்வரர் கோவில் பல வகை உரிமங்கள் ஏலம்
ADDED : ஜூலை 15, 2025 09:27 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பல வகை உரிமங்கள், 2.73 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளன.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு பசலி ஆண்டும், பல வகை உரிமங்களுக்காக பொது ஏலம் விடப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, கோவில் வளாக தென்னை மரங்கள் மேல் மகசூல், கோவில் மற்றும் மலையடிவாரத்தில் தேங்காய், வாழை, மலர், மலைக்கோவிலில் பூஜை பொருட்கள் வியாபாரம், முடி சேகரித்தல் உள்ளிட்ட பல வகை தனித்தனி உரிம ஏலம், ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் புவியரசு ஆகியோர் முன்னிலையில், நேற்று நடத்தப்பட்டது.
முன்வைப்பு தொகை செலுத்திய ஆறு பேர் பங்கேற்றனர்.
அனைத்து உரிமங்கள் சேர்த்து, 2.73 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏல தொகையை விட, 80,000 ரூபாய் கூடுதலாக விடப்பட்டதாகவும், கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.