ADDED : பிப் 20, 2025 11:50 PM
திருப்போரூர்: திருப்போரூர் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர்களை இரட்டிப்பாக உற்பத்தி செய்யும் வகையில், காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, வட்டார தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது:
திருப்போரூர் வட்டாரத்தில், கிராமங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி தோட்டம் அமைக்க, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன.
தோட்டக்கலைத் துறை வாயிலாக, 60 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன.
இதை பெறுவதற்கு, ஆதார் அட்டை நகலுடன், திருப்போரூர் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர் சவுமியா- 7708822861, உதவி தோட்டக்கலை அலுவலர் ரபூனி விஜயசெல்வம்- 9841932141, மூர்த்தி 8680036208, மோகன் -9791195846 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.