/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் காய்கறி கடைகள் திருப்போரூரில் தினமும் நெரிசல்
/
சாலையோரம் காய்கறி கடைகள் திருப்போரூரில் தினமும் நெரிசல்
சாலையோரம் காய்கறி கடைகள் திருப்போரூரில் தினமும் நெரிசல்
சாலையோரம் காய்கறி கடைகள் திருப்போரூரில் தினமும் நெரிசல்
ADDED : பிப் 20, 2025 11:49 PM

திருப்போரூர், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையையொட்டி, காய்கறி கடைகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுவட்டார கிராமத்தினர், 20க்கும் மேற்பட்ட பல்வேறு காய்கறி கடைகளை அமைத்து நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தினசரி மாலை நேரத்தில் மட்டும் பெரும்பான்மையான கடைகள் செயல்படுகின்றன.
ஏற்கனவே, மேற்கண்ட சாலை குறுகியதாக உள்ளது. இச்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், இந்த காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்க வருவோர் தங்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை, சாலையில் நிறுத்துகின்றனர்.
மேலும், இங்கு திரியும் கால்நடைகள் காய்கறிகளை சாப்பிட வரும் போது, விரட்டி அடிக்கின்றனர். அப்போது கால்நடைகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுகின்றன.
இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, மேற்கண்ட கடைகளை காலியான மாற்று இடத்தில் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

