ADDED : பிப் 10, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,செங்கல்பட்டு, அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன், 32. கடந்த 6ம் தேதி இரவு தன் 'புல்லட் ' பைக்கில் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
நள்ளிரவு மீண்டும் வீடு திரும்பும் போது செங்கல்பட்டு -- -காஞ்சிபுரம் சாலையில் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலை எதிரே வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். செங்கல்பட்டு நகர போலீசார் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை நிரஞ்சன் உயிரிழந்தார்.