/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள் புறநகரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
/
சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள் புறநகரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள் புறநகரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள் புறநகரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
ADDED : நவ 04, 2024 03:06 AM

மறைமலை நகர்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கியுள்ளனர்.
இவர்கள், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி முதல், பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
நேற்று விடுமுறை முடிந்ததை தொடர்ந்து, மதியம் முதல் சென்னை திரும்பினர். இதன் காரணமாக, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.
இருங்குன்றம்பள்ளி, பரனுார், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையை நோக்கி சென்ற கனரக வாகனங்கள், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் சாலையில் மாற்றி விடப்பட்டது. முக்கிய சந்திப்புகளில், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவில், அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு, இரு மார்க்கங்களிலும், 5 வாகனங்கள் கடக்கும் வகையில், ட்ரக் லைன்கள் உள்ளன.
வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. அவ்வகையில், தீபாவளி பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற மக்கள், நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து, நேற்று சென்னை திரும்பினர்.
இதன் காரணமாக, ஆத்துார் சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகப்படியான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால், சுங்கக் கட்டணம் இன்றி, சில மணி நேரம் திறந்து விடப்பட்டது.
இருப்பினும், நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை, 70,000 அதிகமான வாகனங்கள், சுங்கச் சாவடியை கடந்து, சென்னை நோக்கி சென்றன.
இரவு நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். நெரிசலை தவிர்க்க, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டனர்.