/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் அருகே சாலை பணியால் 5 கி.மீ., அணிவகுத்து நின்ற வாகனங்கள்
/
மதுராந்தகம் அருகே சாலை பணியால் 5 கி.மீ., அணிவகுத்து நின்ற வாகனங்கள்
மதுராந்தகம் அருகே சாலை பணியால் 5 கி.மீ., அணிவகுத்து நின்ற வாகனங்கள்
மதுராந்தகம் அருகே சாலை பணியால் 5 கி.மீ., அணிவகுத்து நின்ற வாகனங்கள்
ADDED : டிச 27, 2024 02:22 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 5 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கருங்குழி அடுத்த மேலவலம்பேட்டை பகுதியில், சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
இதனால், மதுராந்தகத்திலிருந்து கள்ளபிரான்புரம் வரை, தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு மார்க்கத்திலும், 5 கி.மீ., துாரத்திற்கு மேல், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களும் அதிகரித்து உள்ளன. இதன் காரணமாகவும், நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில், மதுராந்தகம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து ஈடுபட்டனர். இதுபோன்று, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் தொடரும் நிலையில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நேரத்தில், கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

