/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புலி போல பாயும் வாகனங்கள்; புலிப்பாக்கத்தில் சிக்னல் அமையுமா?
/
புலி போல பாயும் வாகனங்கள்; புலிப்பாக்கத்தில் சிக்னல் அமையுமா?
புலி போல பாயும் வாகனங்கள்; புலிப்பாக்கத்தில் சிக்னல் அமையுமா?
புலி போல பாயும் வாகனங்கள்; புலிப்பாக்கத்தில் சிக்னல் அமையுமா?
ADDED : அக் 14, 2024 06:29 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டிலிருந்து தாம்பரம், சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், புலிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன.
இச்சாலை வழியாக, புலிப்பாக்கம், வீராபுரம், பரனுார் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை, அத்தியாவசிய பணிக்கு, ஏராளமானோர் செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.
இப்பகுதியில், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வாகனங்கள் வருகின்றன.
இந்த வாகனங்கள் புலிப்பாக்கம் பகுதியில் கடக்கும்போது, வேகமாக செல்கின்றன. இதனால், சாலையில் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். இங்கு, அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.
இதனை தவிர்க்க, தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைத்துறையிடம், சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் நலன்கருதி, தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.