/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளச்சேரி பஸ் நிலைய பணி சி.எம்.டி.ஏ., விளக்கம்
/
வேளச்சேரி பஸ் நிலைய பணி சி.எம்.டி.ஏ., விளக்கம்
ADDED : டிச 26, 2024 12:43 AM
சென்னை, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில், பேருந்து நிலையம் அமைக்க, 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த  இடத்தில் பேருந்து நிலையம் அமைக்காமல், வேளச்சேரி விஜயநகர் சாலையில் நெரிசல் ஏற்படும் வகையில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., மேற்கொண்டு வருகிறது.  திட்டமிடல் இன்றி, பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, மக்கள் குற்றச்சாட்டு குறித்து, நம் நாளிதழில், டிச., 23ல் செய்தி வெளியானது.
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட விளக்க அறிக்கை:
வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை, 2 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்துடன் சேர்த்து, இங்கு விஜய நகர் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் அக்., 28ல் துவங்கின.
சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின் அடிப்படையில், மாநகர் போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து காவல் துறையுடன் கலந்து பேசி, அதன் அடிப்படையிலேயே இப்பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

