/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேங்கடமங்கலம் சாலை மோசம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
/
வேங்கடமங்கலம் சாலை மோசம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
வேங்கடமங்கலம் சாலை மோசம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
வேங்கடமங்கலம் சாலை மோசம் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
ADDED : டிச 08, 2024 08:31 PM
கூடுவாஞ்சேரி:வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையில், அரசு பள்ளி செயல்படுகிறது. இப்பகுதியில் உள்ள சாலையில், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலையில், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிறு, சிறு விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை பகுதிவாசிகள் புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.