/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெண்ணாங்குப்பட்டு சாலை 20 ஆண்டுக்கு பின் சீரமைப்பு
/
வெண்ணாங்குப்பட்டு சாலை 20 ஆண்டுக்கு பின் சீரமைப்பு
வெண்ணாங்குப்பட்டு சாலை 20 ஆண்டுக்கு பின் சீரமைப்பு
வெண்ணாங்குப்பட்டு சாலை 20 ஆண்டுக்கு பின் சீரமைப்பு
ADDED : அக் 18, 2024 01:35 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், வெண்ணாங்குப்பட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, கரும்பாக்கம், கோட்டைக்காடு, நல்லுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை, பேரூராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.
பின் முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
பல ஆண்டுகளாக சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், பேரூராட்சி பொது நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 450 மீட்டர் நீளத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.