/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வித்யா மந்திர் கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி., பள்ளி அபாரம்
/
வித்யா மந்திர் கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி., பள்ளி அபாரம்
வித்யா மந்திர் கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி., பள்ளி அபாரம்
வித்யா மந்திர் கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி., பள்ளி அபாரம்
ADDED : ஜன 25, 2025 12:21 AM
சென்னைபள்ளிகளுக்கு இடையிலான வித்யா மந்திர் யூ - -14 கிரிக்கெட் போட்டியில், கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி, 23 ரன்கள் வித்தியாசத்தில், சாந்தோம் பள்ளியை தோற்கடித்தது.
வித்யா மந்திர் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான யூ -- 14 கிரிக்கெட் போட்டிகள், சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள், நான்கு குழுவில் மோதுகின்றன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடக்கும் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தில் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த கடைசி 'லீக்' சுற்றில், குரூப் - - ஏ பிரிவில் வித்யா மந்திர் பள்ளி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 94 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த செட்டிநாடு வித்யாஷ்ரம், 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, நான்கு விக்கெட் இழப்புக்கு, 91 ரன்களை அடித்து தோல்வியடைந்தது.
அதே பிரிவில் மற்றொரு போட்டியில் செட்டிநாடு வித்யாஷ்ரம், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 94 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பி.எஸ்., சீனியர் பள்ளி, 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு, 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 31 ரன்கள் வித்தியாசத்தில், செட்டிநாடு வித்யாஷ்ரம் வெற்றி பெற்றது.
குரூப் - - பி பிரிவில், கே.கே. நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி, 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 101 ரன்களை எடுத்தது. எதிர்த்து பேட்டிங் செய்த சாந்தோம் மெட்ரிக் பள்ளி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து, 78 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால், 23 ரன்கள் வித்தியாசத்தில், பி.எஸ்.பி.பி., பள்ளி வெற்றி பெற்றது.
குரூப் -- சி பிரிவில் நடந்த போட்டி ஒன்றில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து, 98 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு, 95 ரன்கள் அடித்து, மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டிகள் தொடர்கின்றன.