/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 16வது பட்டமளிப்பு விழா
/
வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 16வது பட்டமளிப்பு விழா
வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 16வது பட்டமளிப்பு விழா
வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 16வது பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 17, 2025 01:33 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், 16ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்விக்குழும தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், கடந்த 15ம் தேதி நடந்தது.
கல்லுாரி முதல்வர் அருணாதேவி முன்னிலை வகித்தார். ரானே மெட்ராஜ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கவுரி கைலாசம் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
பெண்களுக்கு, கல்வி கண் போன்றது. அது பெண்களுக்கு முழுமையான வாழ்க்கையை தருவதுடன் தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் அளிக்கிறது.
எதை சாதிக்க நினைக்கிறோமோ, அதை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும். தன் தாய், தந்தை ஆசிரிய பெருமக்கள், தான் கற்ற கல்லுாரிக்கும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அதன் பின், 2020-23ம் கல்வியாண்டில் 600க்கும் மேற்பட்ட மாணவியருக்கு பட்டங்கள், பல்கலை தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த இளங்கலை மாணவியர் ஒன்பது பேருக்கு பட்டம், பதக்கங்கள் வழங்கினர். கல்லுாரி நிர்வாக பொருளாளர் சுரேஷ் கன்காரியா உள்ளிட்ட பெற்றோர், மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.