/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர்கள் திருப்போரூரில் போராட்டம்
/
கிராம உதவியாளர்கள் திருப்போரூரில் போராட்டம்
ADDED : ஏப் 01, 2025 10:14 PM
திருப்போரூர்:தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், திருப்போரூர் வட்டம் சார்பில், திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் மாலை 6:00 மணியளவில், காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
தொடர்ந்து இப்போராட்டம், இன்று காலை 6:00 மணியளவில் நிறைவடைந்தது.
காத்திருப்பு போராட்டத்தில், சங்க தலைவர் ஏழுமலை, செயலர் வேலு, பொருளாளர் பிரகாசம் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும், மாதாந்திர சி.பி.எஸ்., சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு இறுதி தொகையை வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

