/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
கிராம உதவியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஏப் 02, 2025 10:06 PM
வண்டலுார்:தமிழ்நாடு வருவாய்த் துறையில், கிராம உதவியாளர்களாக பணியாற்றும் நபர்களுக்கு பணி நிரந்தரம், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 15,700 ரூபாய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024, டிச., 17ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
நான்கு மாதங்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கான முன்னெடுப்புகள் இதுவரை துவங்கவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் கிராம உதவியாளர்கள், வண்டலுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை நடந்த இந்த போராட்டத்தில் 5 பெண்கள் உட்பட 23 பேர் பங்கேற்றனர்.

