/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய நிழற்குடை அமைக்க கிராமவசிகள் எதிர்பார்ப்பு
/
புதிய நிழற்குடை அமைக்க கிராமவசிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 07, 2024 10:02 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே உள்ள கன்னிமங்கலம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இப்பகுதிவாசிகள் சித்தாமூர், மதுராந்தகம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பேருந்து நிறுத்தத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது. நாளடைவில் பராமரிப்பு இல்லாமல், நிழற்குடை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்போர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கன்னிமங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.