/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முகையூர்- - கொடூர் சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
முகையூர்- - கொடூர் சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
முகையூர்- - கொடூர் சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
முகையூர்- - கொடூர் சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : ஏப் 28, 2025 01:35 AM

கூவத்துார்:கடந்த 20 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள முகையூரில் இருந்து கொடூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூவத்துார் அருகே முகையூர்--கொடூர் செல்லும் 2.3 கி.மீ., அளவுடைய தார் சாலை உள்ளது.
தினமும் ஏராளமான வாகனங்கள் சாலையை கடந்து செல்கின்றன.
வயல்வெளிப் பகுதியில் சாலை உள்ளதால், பெரும்பாலும் விவசாயிகள் தங்கள் வயல்வெளிக்கு சென்றுவர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
நாளடைவில் சாலை பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளன.
மழைக் காலங்களில் சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
முகையூர் - -கொடூர் செல்லும் சாலையின் நடுவே பகிங்ஹாம் கால்வாய் உள்ளது.
கொடூரில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை உள்ள 1 கி.மீ., அளவுடைய சாலை கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது.
ஆனால் பகிங்ஹாம் கால்வாயில் இருந்து முகையூர் வரை உள்ள 1.3 கி.மீ., அளவுடைய சாலை, தற்போது வரை சீரமைக்கப்படவில்லை.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள 1.3 கி.மீ., நீள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.