/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
6 நாட்களாக குடிநீர் இல்லை போந்துார் கிராமவாசிகள் அவதி
/
6 நாட்களாக குடிநீர் இல்லை போந்துார் கிராமவாசிகள் அவதி
6 நாட்களாக குடிநீர் இல்லை போந்துார் கிராமவாசிகள் அவதி
6 நாட்களாக குடிநீர் இல்லை போந்துார் கிராமவாசிகள் அவதி
ADDED : டிச 03, 2024 08:16 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த போந்துார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்னேரிப்பட்டு, வயலுார், சிறுகளத்துார் உள்ளிட்ட பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
போந்துார் பகுதியில் கடந்து 6 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பழுதடைந்ததால், கடந்த வாரம் 28, 29ம் தேதி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
பின், தற்போது 'பெஞ்சல்' புயல் காரணமாக மின்கம்பங்கள் சேதமடைந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதால், கடந்த 6 நாட்களாக குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
கை பம்ப் மற்றும் வயல்வெளியில் உள்ள கிணற்று நீரை, குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, போந்துார் ஊராட்சிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.