/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒழவெட்டியில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கிராமத்தினர் வேண்டுகோள்
/
ஒழவெட்டியில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கிராமத்தினர் வேண்டுகோள்
ஒழவெட்டியில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கிராமத்தினர் வேண்டுகோள்
ஒழவெட்டியில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கிராமத்தினர் வேண்டுகோள்
ADDED : மே 02, 2025 01:54 AM

சித்தாமூர்:ஒழவெட்டி கிராமத்தில், சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் அருகே ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட ஒழவெட்டி கிராமத்தில், சின்னவெண்மணி செல்லும் சாலை ஓரத்தில் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் சாலை ஓரத்தில் தேங்கி, நோய்த் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.
மேலும், சாலை ஓரத்தில் தேங்கும் தண்ணீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆவதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒழவெட்டி கிராமத்தில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.