/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வில்லிப்பாக்கம் -- செய்யூர் சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்
/
வில்லிப்பாக்கம் -- செய்யூர் சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்
வில்லிப்பாக்கம் -- செய்யூர் சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்
வில்லிப்பாக்கம் -- செய்யூர் சாலையில் மண் அரிப்பால் விபத்து அபாயம்
ADDED : ஜன 21, 2024 05:31 AM

செய்யூர்: சூணாம்பேடு அடுத்த கடுக்கலுார் கிராமத்தில், வில்லிப்பாக்கம் -- செய்யூர் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலை.
விநாயகர் கோவில் அருகே, கடந்த 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த மழையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து, சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது.
இதையடுத்து, கடந்த 8ம் தேதி பெய்த கனமழையில், மேலும் மண் அரிக்கப்பட்டு, சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு, சாலையின் நிலை மேலும் மோசமானது.
இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் புதிதாக சாலையில் செல்வோர், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.