/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நின்னக்கரை கிராமத்தில் தெப்ப திருவிழா விமரிசை
/
நின்னக்கரை கிராமத்தில் தெப்ப திருவிழா விமரிசை
ADDED : டிச 14, 2024 07:20 PM
மறைமலைநகர்:நின்னக்கரை கிராமத்தில், தீப திருவிழாவையொட்டி, தெப்ப திருவிழா நடைபெற்றது.
மறைமலைநகர் நகராட்சி நின்னக்கரை கிராமத்தில், கெங்கையம்மன், ஆலையம்மன் கோவில்கள் புகழ்பெற்றவை. இங்கு ஆண்டுதோறும், தீப திருவிழாவையொட்டி, தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு, தீப திருவிழாவையொட்டி கெங்கையம்மன், ஆலையம்மனுக்கு, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், கெங்கையம்மன் கோவில் குளத்தில், தெப்ப திருவிழா நடைபெற்றது.
நின்னக்கரை அருகிலுள்ள கிராமவாசிகள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கிராமவாசிகள் செய்திருந்தனர்.