/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஐ.பி., நகர் பூங்கா புதர் மண்டி சீரழிவு
/
வி.ஐ.பி., நகர் பூங்கா புதர் மண்டி சீரழிவு
ADDED : நவ 20, 2024 11:49 PM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு, வி.ஐ.பி., நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, வி.ஐ.பி., நகர் பிரதான சாலையோரம், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது.
இதில், சிறுவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், நடைபயிற்சி நடைபாதை, அமர்ந்து பேச இருக்கைகள் போன்றவை, நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
துவகக்தில், முறையாக பராமரிக்கப்பட்டு வந்த பூங்கா, தற்போது கேட்பாரற்று பாழடைந்து, புதர் மண்டி காணப்படுகிறது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த பூங்காவில், மாலை நேரங்களில் குழந்தைகள் தினமும் விளையாட வருவர். முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு இளைப்பாறுவர். பொங்கல் விழா போன்றவை இங்கு நடத்தப்படுவது வழக்கம்.
தற்போது, பூங்கா புதர் மண்டி பாழடைந்து, பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகளை சுற்றி புதர் மண்டியுள்ளதால், விஷ ஜந்துக்களின் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில், பூங்காவை சுத்தம் செய்து, குடியிருப்புவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

