/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணுசக்தி துறை நடத்தும் வாலிபால் போட்டி துவக்கம்
/
அணுசக்தி துறை நடத்தும் வாலிபால் போட்டி துவக்கம்
ADDED : பிப் 06, 2024 05:41 AM

கல்பாக்கம், : அணுசக்தி துறையின்கீழ், தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், அணுமின் நிலையங்கள், பிற அணுசக்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.
அத்துறை ஊழியர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்த, அனைத்து அணுசக்தி நிறுவனங்கள் இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், 38ம் ஆண்டு வாலிபால் போட்டி, கல்பாக்கம் விளையாட்டு மேம்பாட்டு குழு மற்றும் 'நெஸ்கோ' கழகம் சார்பில், கல்பாக்கம் விளையாட்டு அரங்கில், நேற்று துவக்கப்பட்டது. சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் பி. ஷெல்கே, பாவினி அணுமின் நிறுவன தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியாக, ராமேஸ்வரம் மற்றும் எல்லோரா அணிகள் மோதின. தமிழகம் மற்றும் பிற மாநில நிறுவனங்களின் ஊழியர்கள் இடம்பெற்ற எட்டு அணிகளை சேர்ந்த, 120 பேர் விளையாடுகின்றனர்.
வரும் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.