ADDED : டிச 07, 2024 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ேஹன்ட் இன் ேஹன்ட் இந்தியா நிறுவன குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில், தன்னார்வலர் தின விழா, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி தலைமையில் நேற்று நடந்தது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில், தன்னார்வலர்களின் பங்களிப்பை அங்கீகரித்தல் என்ற கருப்பொருளில், இத்தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் அரசு, வாழ்த்து மடல் வெளியிட, குழந்தை உரிமை பாதுகாப்புக் குழு தன்னார்வ உறுப்பினர்களின் சமூக பங்களிப்பை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கினார். குழு உறுப்பினர்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். நிறுவன முதன்மை மேலாளர் தேவேந்திரன், ஒன்றிய மேலாளர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.