/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் கோவில் இடம் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை
/
திருக்கழுக்குன்றம் கோவில் இடம் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை
திருக்கழுக்குன்றம் கோவில் இடம் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை
திருக்கழுக்குன்றம் கோவில் இடம் ஆக்கிரமிப்பை தடுக்க எச்சரிக்கை பலகை
ADDED : டிச 23, 2024 01:40 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க, கோவில் நிர்வாகம் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
இங்கு, செங்கல்பட்டு சாலை பகுதியில், கோவிலுக்குச் சொந்தமாக புல எண் 460ல், 1.28 ஏக்கர் இடம் உள்ளது. இங்குள்ள இந்திரா நகர் பகுதியினர், கோவில் இடத்தை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டி வசிக்கின்றனர்.
அண்மையில், கோவில் நிர்வாகம் இப்பகுதியை அளவிட்டு, அறநிலையத்துறை குறியீட்டுடன் எல்லை கற்கள் நட்டது.
இங்கு வசிப்பிட பகுதியுடன், செங்கல்பட்டு சாலையை இணைக்கும் குறுக்கு சந்து மண்பாதை, கோவில் இடமாக உள்ளது.
மண்பாதையை கான்கிரீட் சாலையாக அமைக்க முடிவெடுத்த பேரூராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், எதிர்ப்பையும் மீறி அண்மையில் சாலை அமைத்தது.
மேலும், மைதானமாக உள்ள கோவில் இடத்தை ஆக்கிரமிக்கவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதை தவிர்க்க, கோவில் இடத்தை ஆக்கிரமிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்து, கோவில் நிர்வாகம் தற்போது, அறிவிப்பு பலகை அமைத்துள்ளது.

