/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தை தடுக்க மீடியன் தடுப்பில் எச்சரிக்கை 'சிக்னல்' அவசியம்
/
விபத்தை தடுக்க மீடியன் தடுப்பில் எச்சரிக்கை 'சிக்னல்' அவசியம்
விபத்தை தடுக்க மீடியன் தடுப்பில் எச்சரிக்கை 'சிக்னல்' அவசியம்
விபத்தை தடுக்க மீடியன் தடுப்பில் எச்சரிக்கை 'சிக்னல்' அவசியம்
ADDED : மார் 25, 2025 07:39 AM

திருப்போரூர் : திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், எச்சரிக்கை 'சிக்னல்' இல்லாத மீடியன் தடுப்பால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் கொண்டது.
இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலையின் நடுவே, மீடியன் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவ்வாறு இச்சாலையில், செம்பாக்கம் அருகே சுண்ணாம்பு கால்வாய் பகுதி, அரசு மேல்நிலைப் பள்ளி, கொட்டமேடு பகுதிகளில் அமைக்கப்பட்ட திடீர் மீடியன் தடுப்பில், அடிக்கடி வாகனம் மோதி விபத்துகள் ஏற்பட்டன.
வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், இங்கு எந்த பாதுகாப்பு அறிவிப்பும் இல்லை.
இதில், செம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மீடியன் தடுப்பில் மட்டும், தற்போது எச்சரிக்கை சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், செம்பாக்கம் சுண்ணாம்பு கால்வாய் பகுதி, கொட்டமேடு பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், எச்சரிக்கை சிக்னல், போதிய தடுப்பு எதுவும் அமைக்கப்படவில்லை.
இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் மீடியன் இருப்பதை அறியாமல், அதில் மோதி விபத்து ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், அங்கு எச்சரிக்கை சிக்னல், அறிவிப்பு பலகை மற்றும் போதிய 'ரிப்ளக்டர்' எனப்படும் பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.