/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எச்சரிக்கை பலகைகள் திருட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்
/
எச்சரிக்கை பலகைகள் திருட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்
எச்சரிக்கை பலகைகள் திருட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்
எச்சரிக்கை பலகைகள் திருட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்
ADDED : ஜன 27, 2025 11:21 PM

மறைமலைநகர், செங்கல்பட்டு புறநகர் பகுதியைச் சுற்றி செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த நெடுஞ்சாலைகளை ஒட்டி பல்வேறு கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சாலை வளைவுகள், தடுப்பு சுவர்கள் உள்ள இடங்கள் மற்றும் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களில், நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசாரால், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பலகைகள் இரும்பு மற்றும் அலுமினியத்தால் அமைக்கப்பட்டவை என்பதால், நெடுஞ்சாலையை ஒட்டி வசிக்கும் சிலர், இந்த எச்சரிக்கை பலகைகளை பெயர்த்து எடுத்துச் சென்று விடுகின்றனர்.
இதனால், இந்த சாலைகளில் செல்லும் புதிய வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.