/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை பஸ் நிலையத்தில் சுற்றியவர்களுக்கு எச்சரிக்கை
/
செங்கை பஸ் நிலையத்தில் சுற்றியவர்களுக்கு எச்சரிக்கை
செங்கை பஸ் நிலையத்தில் சுற்றியவர்களுக்கு எச்சரிக்கை
செங்கை பஸ் நிலையத்தில் சுற்றியவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 22, 2024 03:25 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு நகரத்தில், அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், சட்டக்கல்லுாரி, செவிலியர் கல்லுாரி மற்றும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
இங்கு, செங்கல்பட்டை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவியர், அரசு பேருந்துகள் வாயிலாக வந்து செல்கின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் வந்து செல்லும் பள்ளி மாணவியரை குறி வைத்து, மாலை நேரங்களில் குறிப்பிட்ட இளைஞர்கள் வந்து, அவர்களை சீண்டுதல், கிண்டல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், பேருந்துகளில் பின் தொடர்ந்து, தங்களின் சமூக வலைதள முகவரிகளை பள்ளி மாணவியருக்கு தருவதாகவும், செங்கல்பட்டு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இது குறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு நகர போலீசார், புதிய பேருந்து நிலையத்தை சுற்றித்திரிந்த இளைஞர்களை விரட்டினர். பல மணி நேரமாக பேருந்து நிலையத்தில் இருந்த இளைஞர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
தொடர்ந்து, காலைமற்றும் மாலை நேரங்களில், பேருந்து நிலையத்தின் உள்ளே தினமும் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.