/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'வாஸ்போ' சதுரங்க போட்டி மாணவி முதலிடம்
/
'வாஸ்போ' சதுரங்க போட்டி மாணவி முதலிடம்
ADDED : பிப் 20, 2025 12:11 AM
சென்னை, எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'வாஸ்போ' என்ற தலைப்பில், மாநில செஸ் போட்டியை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, கல்லுாரி வளாகத்தில் நடத்தி வருகிறது. இதில், பள்ளி அளவில், 15, 18 வயது பிரிவுகளும், கல்லுாரி பிரிவினருக்கு தனியாகவும் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த கல்லுாரி அளவிலான போட்டியில், 50 கல்லுாரிகளில் இருந்து, 145 மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர். அனைத்து சுற்றுகள் முடிவில், நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லுாரி மாணவி ரெபேக்கா ஜெசுமரியன் முதலிடத்தை பிடித்து, 20,000 ரூபாய் ரொக்க பரிசை வென்றார்.
அவரை தொடர்ந்து, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் திவ்யபாரதி இரண்டாமிடத்தையும், செயின்ட் ஜோசப் கல்லுாரி அக்சயா விஜயன், டபிள்யூ.சி.சி.,யின் கீர்த்தனா, குருநானக்கல்லுாரியின் சாந்தினி ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை வென்றனர்.
முதல் பத்து இடங்களை வென்றோருக்கு ரொக்க பரிசுகளை, கல்லுாரியின் மாணவியும், கிராண்ட் மாஸ்டருமான வைஷாலி, நேற்று மாலை வழங்கினார்.