/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்று குழாய் உடைந்து செங்கையில் வீணான குடிநீர்
/
பாலாற்று குழாய் உடைந்து செங்கையில் வீணான குடிநீர்
ADDED : அக் 15, 2024 02:08 AM

மறைமலை நகர், அக். 15--
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளதையடுத்து, தமிழக அரசு சார்பில், பேரிடர் மீட்பு குழுவினர், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திம்மாவரம் நீஞ்சல் மதகு பகுதியில், நேற்று மதியம் ஆய்வு செய்ய இருந்தனர்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மதகு பகுதிக்கு அதிகாரிகள் சென்று வர வசதியாக, நேற்று காலை பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் எடுக்கப்பட்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக, அந்த பகுதியில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த, செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பாலாற்று குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணானது.
இது குறித்து, திம்மாவரம் ஊராட்சி நிர்வாகத்தினர், செங்கல்பட்டு நகராட்சி குடிநீர் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மோட்டாரை நிறுத்தினர். அதன் பின், உடைந்த குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.