/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூழங்காடு ஏரிக்கரை உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்
/
கூழங்காடு ஏரிக்கரை உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்
கூழங்காடு ஏரிக்கரை உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்
கூழங்காடு ஏரிக்கரை உடைந்து வீணாக வெளியேறும் தண்ணீர்
ADDED : டிச 17, 2024 12:33 AM

சூணாம்பேடு, சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில் கூழங்காடு ஏரி உள்ளது.
இதன் மொத்த பரப்பளவு 50 ஏக்கர், ஏரி ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த ஏரி மூலமாக சுமார் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் நீர்பாசனம் பெறுகிறது.
புதுப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக கூழங்காடு ஏரிக்கு வருகிறது.கூழங்காடு ஏரியில் இருந்து மதகுகள் மூலமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கின்றன.
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டி, அழுத்தம் தாங்காமல், கடந்த வாரம் ஏரிக்கரை உடைந்தது.தற்போது வரை ஏரிக்கரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், ஏரி நீர் விவசாய நிலங்களில் பெருக்கெடுத்து பயிர்களை மூழ்கடிக்கிறது.
மேலும் உடைப்பு வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை ஏரியில் சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், ஆய்வு செய்து, உடைந்துள்ள ஏரிக்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.