/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 அடி பள்ளத்தில் குடிநீர் குழாய்கள் தண்டரை கிராமத்தினர் தவிப்பு
/
3 அடி பள்ளத்தில் குடிநீர் குழாய்கள் தண்டரை கிராமத்தினர் தவிப்பு
3 அடி பள்ளத்தில் குடிநீர் குழாய்கள் தண்டரை கிராமத்தினர் தவிப்பு
3 அடி பள்ளத்தில் குடிநீர் குழாய்கள் தண்டரை கிராமத்தினர் தவிப்பு
ADDED : ஏப் 24, 2025 01:50 AM

பவுஞ்சூர்,:தண்டரை கிராமத்தில், வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழாய்கள், மூன்றடி பள்ளத்தில் உள்ளதால், கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
பவுஞ்சூர் அருகே தண்டரை ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நகர் காலனி பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குழாய்களின் வாயிலாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குழாய்களில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், 20க்கும் மேற்பட்ட குழாய்களில், மூன்றடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
பெண்கள் மற்றும் முதியவர்கள் பள்ளத்தில் இறங்கி தண்ணீர் பிடிக்க, கடும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலத்தில் குழாய் பள்ளத்தில் மழைநீர் நிரம்பி, தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனால், கூடுதலாக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வரை அமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி, திருமால் நகர் பகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.