/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூங்குணம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு
/
பூங்குணம் ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு
ADDED : ஜன 25, 2025 10:15 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பூங்குணம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
புத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மேல்நிலைத் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, கிராம மக்களுக்கு குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
வழக்கமாக தினசரி 15 முதல் 20 குடம் அளவிற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது,
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக குழாய்களில் 2 முதல் 4 குடம் வரை குறைந்த அளவே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால், குடிநீர் ,கழிப்பறை, சமையல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பூங்குணம் ஊராட்சியில் முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.