/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி நகராட்சியில் நீர்மோர் வழங்கல்
/
கூடுவாஞ்சேரி நகராட்சியில் நீர்மோர் வழங்கல்
ADDED : ஏப் 17, 2025 10:08 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, கோடை காலம் முழுதும், தங்கு தடையின்றி நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், நகராட்சி அலுவலத்திற்கு வரும் பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக நீர்மோர் வழங்க நகராட்சி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, 20 லி., கொள்ளளவு உள்ள 'பிளாஸ்டிக் கேன்' உள்ளே மோர் அடைக்கப்பட்டு, நகராட்சி அலுவலகத்தின் பிரதான அறையில் வைக்கப்பட்டுள்ளது. அருகே, 200 மி.லி., அளவுள்ள காகித டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி அலுவலத்திற்கு வரும் பொதுமக்கள், தங்கள் தாகம் தீரும்வரை 'அன் லிமிட்' ஆக நீர்மோர் அருந்தலாம். 'பிளாஸ்டிக் கேன்' மோர் காலியாகும்போது, அடுத்த 'கேன்' தயாராக வைக்கப்படுகிறது.
கோடை முடியும்வரை இந்த நீர்மோர் சேவை தொடரும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.