/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் தொட்டி கட்டும் பணி விறுவிறு
/
குடிநீர் தொட்டி கட்டும் பணி விறுவிறு
ADDED : ஜன 19, 2025 02:21 AM
செங்கல்பட்டு, ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேதநாராயணபுரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட பகுதியில், குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம், கிராமவாசிகள் முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, புதிததாக 30,000 கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்ட, 15 வது நிதிக்குழு நிதியில், 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணி நடந்து வருகிறது.

