/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேம்பால பகுதியில் தேங்கும் நீர் கடமலைப்புத்துாரில் அச்சம்
/
மேம்பால பகுதியில் தேங்கும் நீர் கடமலைப்புத்துாரில் அச்சம்
மேம்பால பகுதியில் தேங்கும் நீர் கடமலைப்புத்துாரில் அச்சம்
மேம்பால பகுதியில் தேங்கும் நீர் கடமலைப்புத்துாரில் அச்சம்
ADDED : டிச 14, 2024 11:43 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையைக் கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் அமைக்கப்பட்டது.
தற்போது, பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மேம்பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதியில் பிளாஸ்டிக் குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தேங்கியுள்ள மழைநீர் வடிந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் பள்ளங்கள் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை பயன்படுத்துவோர், மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.