/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பகுதியில் தர்பூசணி சாகுபடி பணி தீவிரம்
/
செய்யூர் பகுதியில் தர்பூசணி சாகுபடி பணி தீவிரம்
ADDED : பிப் 10, 2025 11:50 PM

செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளது.
கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. ஏரி, ஆறு, குளம், கிணறு, ஆழ்துளைகிணறு போன்ற நீர் ஆதாரங்கள் மூலமாக நெல், மணிலா, தர்பூசணி, கரும்பு ,எள், உளுந்து, ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகின்றன.
செய்யூர் பகுதியில் அதிகபடியாக நெல், மணிலா மற்றும் தர்பூசணி விவசாயம் செய்யப்படுகிறது.
டிச.,ஜன., பிப், மாதத்தில் பயிரிடப்படும் தர்பூசணி செடிகள் ஏப்ரல்,மே,ஜுன் மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன.
நாம்தாரி, விஷால், டிராகன், என்.எஸ் 295 உள்ளிட்ட பல்வேறு வகையான தர்பூசணி ரகங்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.இந்த பழங்கள் சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. நல்ல சீசன் காலங்களில் அதிகபட்சமாக ஒரு டன் 17,000 முதல் 21 ,000 ரூபாய் வரை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.