/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வீரபோகம் விவசாயிகள் வேண்டுகோள்
/
ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வீரபோகம் விவசாயிகள் வேண்டுகோள்
ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வீரபோகம் விவசாயிகள் வேண்டுகோள்
ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வீரபோகம் விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஜன 26, 2025 01:56 AM

செய்யூர்:செய்யூர் அருகே வீரபோகம் பகுதியில் செங்காட்டூர், அரியனுார், மேலப்பட்டு, இரணியசித்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கடலுக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் உள்ளது.
இந்த உபரிநீர் கால்வாய் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து, கால்வாயாகவும் உள்ளது.
சுமார் 50 மீட்டர் அகலம் 15 கி.மீ., நீளமுடைய கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
கால்வாய் இப்பகுதியில் உள்ள வயல்வெளிகளின் பிரதான நீர் ஆதாரமாக உள்ளது. கால்வாய் மூலமாக சுமார் 2, 000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாசனம்பெறுகிறது.
சுமார் 50 ஆண்டுகளாக உபரிநீர் கால்வாய் பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி, கருவேலமரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன.
இதனால் மழைகாலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி, விரபோகம்,கீழச்சேரி,பெரும்பாக்கம் போன்ற கிராம வயல்வெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெற்பயிர்கள் சேதமடைகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
மேலும் மழைகாலத்தில் அதிகபடியான தண்ணீர் வீணாக, கடலுக்கு செல்வதால், கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் உபரிநீர் கால்வாயை துார்வாரி சீரமைத்து,கால்வாய் நடுவே தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.