ADDED : ஜன 19, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன், 45. பிளம்பர். இவர், நேற்று முன்தினம், சட்டமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்று உள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெல்டர் வேலை செய்து வரும் முனுசாமி, 37. என்பவருக்கும் இடையே மீன் பிடிப்பதில் சண்டை ஏற்பட்டு உள்ளது. அப்போது அருகில் இருந்த கல்லால் முனுசாமி, தனஞ்செழியனை தாக்கி உள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தனஞ்செழியனை அக்கம்பக்கத்தினர் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலை நகர் போலீசார் முனுசாமியை கைது செய்தனர்.

