/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தடுப்பு சுவர் இல்லாத கிணறுகள் ஊனமாஞ்சேரியில் விபத்து அபாயம்
/
தடுப்பு சுவர் இல்லாத கிணறுகள் ஊனமாஞ்சேரியில் விபத்து அபாயம்
தடுப்பு சுவர் இல்லாத கிணறுகள் ஊனமாஞ்சேரியில் விபத்து அபாயம்
தடுப்பு சுவர் இல்லாத கிணறுகள் ஊனமாஞ்சேரியில் விபத்து அபாயம்
ADDED : செப் 12, 2025 02:17 AM

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில், தடுப்புச் சுவர் இல்லாத இரு கி ணறுகளால், உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளதால், கிணற்றை சுற்றி தடுப்புச் சுவர் கட்டவோ அல்லது கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலை அமைக்கவோ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறு த்தி உள்ளனர்.
வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சியில், ஒன்பது வார்டுகள் உள்ளன. இதில், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பாரிவள்ளல் தெரு பிரதான சாலையோரம், தடுப்புச் சுவர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது.
இதேபோல சித்தேரி எதிரே, நாகாத்தம்மன், கன்னியம்மன் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கிணறு, தடுப்புச் சுவர் இல்லாமல், தரைமட்டமாக உள்ளது.
இந்த இரண்டு கிணறுகளிலும் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்புள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஊனமாஞ்சேரி, பாரிவள்ளல் தெருவிலுள்ள தடுப்புச் சுவர் இல்லாத கிணற்றில், எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பின், அவ்வப்போது, கால்நடைகளும் கிணற்றில் விழுந்து, பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த கிணற்றின் அருகே, 60 வீடுகள் உள்ள தனியார் குடியிருப்பும் உள்ளது.
இங்குள்ள குழந்தைகள் மாலை நேரத்தில், இந்த கிணற்றின் ஓரமாக விளையாடுகின்றனர். அப்போது, தவறி கிணற்றில் விழும் அபாயம் உள்ளது.
தவிர, சாலைக்கு மிக நெருக்கமாக கிணறு உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கிணற்றில் விழுந்து உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல், கன்னியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில், ஏரிக்கரையோரம் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பலமுறை விழுந்து, அங்குள்ள மக்களால் மீட்கப்பட்டுள்ளன.
எனவே, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன், இரண்டு கிணறுகளைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டவோ அல்லது கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலை அமைக்கவோ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.