/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது போதை சாக்லெட் விற்பனை மேற்கு வங்க நபர் கைது
/
பொது போதை சாக்லெட் விற்பனை மேற்கு வங்க நபர் கைது
ADDED : ஏப் 04, 2025 09:47 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொத்தேரி, தைலாவரம் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஆர்.எம்., பல்கலை, மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் படித்தும், வேலை பார்த்தும் வருகின்றனர்.
இவர்களை குறிவைத்து போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு பொத்தேரி பகுதியில் உள்ள கடை ஒன்றில், போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த, 5 கிலோ 'பாங்கு' சாக்லேட்' மற்றும் 12 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளரான, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் மோத்ரி,37, என்பவரை கைது செய்து, விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.