/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நடப்பது என்ன? உடல்களை நாய்கள் தின்னும் அவலம்
/
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நடப்பது என்ன? உடல்களை நாய்கள் தின்னும் அவலம்
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நடப்பது என்ன? உடல்களை நாய்கள் தின்னும் அவலம்
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் நடப்பது என்ன? உடல்களை நாய்கள் தின்னும் அவலம்
ADDED : பிப் 19, 2024 05:00 AM

சென்னை : சென்னை, வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளத்தில் 300 ஆண்டுகள் பழமையான சுடுகாடு உள்ளது. 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டில், மொழிப் போராட்டத் தியாகிகள் தாளமுத்து - நடராசன் மற்றும் தமிழ்மொழி உரிமைக்காக போராடிய டாக்டர் தருமாம்பாள் தனலட்சுமி.
மேலும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மயிலை சிவமுத்து, சத்தியவாணிமுத்து, தமிழர் வரலாற்றை எழுதிய ராஜமாணிக்கனார் உள்ளிட்ட, சென்னையின் முக்கிய பிரமுகர்களின் கல்லறைகள் உள்ளன.
இங்கு ஐந்து மாயன உதவியாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இருந்தும், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால் சுடுகாடு படுமோசமாக உள்ளது.
குடிநீர், தெருவிளக்குகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், இறந்தவர்களின் உடலை கொண்டு வரும் உறவினர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறி வருகிறது.மேலும், மூலக்கொத் தளம் சுடுகாட்டில், இறந்தவர்களின் உடல்களை புதைக்க, ஊழியர்கள் பணம் பெற்று, 6 அடிக்கு 3 அடி ஆழத்தில் புதைக்கின்றனர்.
ஆனால், ஏழை, எளியோர், ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்ய யாரும் பணம் தராததால், 1 அடி ஆழத்தில் புதைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முறையாக புதைக்கப்படாத உடல்களை, சுடுகாட்டு வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்கள் இழுத்துச் செல்கின்றன. இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆதரவற்றோர் உடல்களை முறையாக புதைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

